உள்நாட்டு செய்தி
வாகன விபத்தில் பாடசாலை மாணவன் பலி…!
கெக்கிராவ, கனேவல்பொல வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கெக்கிராவ நெல்லியாகம பகுதியைச் சேர்ந்த 6 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் குசல யுகத் சஞ்சீவ என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த மாணவன் சில காலமாக தந்தையின் அன்பை இழந்துள்ள நிலையில் அவரது தாய் வெளிநாடு சென்றுள்ளார்.
இந்நிலையில் மாணவன் பாட்டியின் பராமரிப்பில் கல்வியை மேற்கொண்டு வந்த நிலையில் விபத்தில் உயிரிழந்துள்ளார்.