Connect with us

முக்கிய செய்தி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ் விஜயம் !

Published

on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.இதன்போது அவர் தலைமையில், பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டிலுள்ள சுமார் 270 ஏக்கர் அளவிலான காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் இந்த விஜயத்தின்போது யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பலருக்கு காணி உறுதிகளும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதேநேரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பருத்தித்துறை, மந்திகை வைத்தியசாலைகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்களையும் திறந்து வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் தேர்தலுக்கு முன்னர் விரைவாக விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் வலியுறுத்தியுள்ளார்.யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.கடந்த 29 ஆண்டுகாலமாக சிறைச்சாலைகளில் தண்டனைகளை அனுபவித்து வரும் 12 தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவித்து, அவர்களை தமது உறவுகளுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும். மிக முக்கியமாக அவர்களை உயிருடன் மீள உறவுகளிடம் கையளிக்க வேண்டும்.எனவே, ஜனாதிபதி தமது யாழ்ப்பாண விஜயத்தின்போது, அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் சிறந்த தீர்மானங்களை எடுப்பார் என தாம் எதிர்பார்ப்பதாகவும் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.