உள்நாட்டு செய்தி
சீனாவிடம் இருந்து இலங்கைக்கு பெரிய வெங்காயம்
சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட பெரிய வெங்காயம் இன்னும் 5 நாட்களில் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.அதன்பின்னர் உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விலை குறைவடையும்.இதற்கு மேலதிகமாக பெரிய வெங்காயத்திற்கு பதிலாக இளஞ்சிவப்பு வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும், இளஞ்சிவப்பு வெங்காய இறக்குமதிக்கு அறவிடப்படும் 70 ரூபாய் வரி 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.