முக்கிய செய்தி
29 பல்கலைக்கழக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி_…!
செவனகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் 29 மாணவர்கள், உணவு ஒவ்வாமை காரணமாக சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுகயீனமடைந்த மாணவர்கள் சூரியவெவ பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 26 மாணவர்களும் 3 மாணவிகளுமே இவ்வாறு சுகயீனமடைந்துள்ளனர். இரவு உணவுக்காக பயன்படுத்திய மீன் வகையே இதற்கு காரணம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.