உள்நாட்டு செய்தி
இலங்கை ரூபாவின் பெறுமதியில் மிகப் பெரும் மாற்றம்! கையிருப்பும் அதிகரிப்பு – நிதி அமைச்சு
கடந்த வாரம் வெளியான மத்திய வங்கியின் அறிக்கைகளுக்கு அமைய, ஜனவரி 2023 மற்றும் ஜனவரி 2024 இற்கு இடையில் ரூபாவின் பெறுமதி 363 இல் இருந்து 307 ஆக மாறியுள்ளது. பெறுமதி உயர்வடைந்துள்ளது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
நாட்டில் பொருளாதாரம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போது, கையிருப்பின் பெறுமதி 2.2 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 4.5 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
வரிகள் 5.9 வீதமாக அதிகரித்துள்ள போதிலும் 70 வீதம் பணவீக்க வீதத்தைப் பராமரிக்க முடிந்துள்ளது. தற்பொழுது நாட்டில் பொருட்களுக்குத் தட்டுப்பாடு இல்லை.
புள்ளிவிபரங்கள் ஒருபுறம் இருக்க, இன்று நாட்டில் உள்ள ஒவ்வொரு பொருளையும் வாங்க முடியும்.
இதனால் நாடு சகஜ நிலைக்கு திரும்பியிருப்பதை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் பொருளாதாரச் சிக்கல் பெருமளவில் குறைந்திருப்பதை உணர முடிகிறது.
இவை அனைத்தும் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான தெளிவான அறிகுறிகள் ஆகும் என குறிப்பிட்டுள்ளார்