உள்நாட்டு செய்தி
சிவனொளிபாத மலையிலிருந்த ஒருவர் உயிரிழப்பு
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற நபரொருவர் திடீர் சுகவீனம் அடைந்து உயிரிழந்துள்ளார்.
ஹட்டன் – நல்லத்தண்ணி வழியாக சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய சென்று கொண்டிருந்த போது திடீர் சுகயீனமடைந்த அவரை உறவினர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் நேற்றுமுன் தினம் அவர் உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
அவரது உடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டு வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
சிவனொளிபாதமலை பருவக்காலம் இவ்வருடம் ஆரம்பமானது முதல் இதுவரை சிவனொளிபாதமலைக்கு தரிசனம் செய்யவந்தவர்களில் அறுவர் மரணமடைந்துள்ளனர்.