Connect with us

உள்நாட்டு செய்தி

துகிந்த ரயில் ஏப்ரல் 5 ஆம் திகதி பயணத்தை ஆரம்பிக்கும் !

Published

on

 

கொழும்பிலிருந்து பதுளைக்கு 100 வருட புகையிரத சேவையை முன்னிட்டு வார நாட்களில் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை பயணிக்கும் வகையில் புதிய சொகுசு சுற்றுலா ரயிலான துகிந்த ஐ புகையிரத திணைக்களம் ஏப்ரல் 5 ஆம் திகதி அறிமுகப்படுத்தவுள்ளது.

பதுளை புகையிரத நிலையத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன் விசேட தபால் தலையொன்றும் வெளியிடப்படவுள்ளது.

ஏப்ரல் 5 முதல் வார நாட்களில் துகிந்த கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கும், பதுளையில் இருந்து காலை 8.00 மணிக்கும் புறப்படும். இந்த ரயிலில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டிககளை கொண்டது . முதல் வகுப்பு டிக்கெட்டின் விலை ரூ. 8,000, என தெரிவிக்கப்படுவதுடன் இருக்கை முன்பதிவுகளை ஒன்லைனில் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *