முக்கிய செய்தி
வெடுக்குநாறி சம்பவம் தொடர்பாக ஜனாதிபதியை சந்திக்க தமிழ் கட்சிகள் தீர்மானம் !
வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில், நாளை மறுதினம் கொழும்பில் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது, சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தவுள்ளதாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.