உள்நாட்டு செய்தி
பெலியத்தை துப்பாக்கிச் சூடு : சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு !
பெலியத்தையில் ஐவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 11 பேர் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.தங்காலை நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் சந்தேக நபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.எமது மக்கள் சக்தியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட 5 பேர் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை வெளியேறும் பகுதிக்கு அருகில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர்.
Continue Reading