Connect with us

உள்நாட்டு செய்தி

இரு பிள்ளைகளை கொலை, தந்தை தற்கொலைக்கு முயற்ச்சி..!

Published

on

இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்று தற்கொலை முயற்சி மேற்கொண்ட தந்தை.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினமான இன்று (14) காலை பெரிய நீலாவணை முஸ்லீம் பிரிவு பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில்,
இடம்பெற்றுள்ளதுடன் சம்பவ இடத்தில் இரு பிள்ளைகளின் சடலம் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டது.

அத்துடன் தனது மனவளர்ச்சி குன்றிய இரு பிள்ளைகளை கொன்று தற்கொலையில் ஈடுபட்ட தந்தையும் காயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் முஹம்மது மிர்சா முகம்மது கலீல் (வயது-63) தற்போது காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,

குறித்த மரணமடைந்த பிள்ளைகளின் தாய் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்திருந்ததாக மேலதிக விசாரணைகளில் வெளியாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *