உள்நாட்டு செய்தி
யானை தாக்கி வயோதிபர் பலி
முல்லைதீவு – அம்பகாமம் பகுதியிலுள்ள பழைய கண்டி வீதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் நேற்று(11) உயிரிழந்துள்ளார்.அம்பகாமம் பகுதியிலுள்ள பழைய கண்டி வீதியில் யானை தாக்கியதில் 62 வயதான வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளார்.சம்பவ இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி மஹ்ரூஸ், சடலத்தை பார்வையிட்டுள்ளதுடன் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைக்க உத்தரவிட்டார்.இதனிடையே, தொடர்ச்சியாக தமது பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகளால் தாம் அச்சத்துடன் வாழவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.