முக்கிய செய்தி
யாழில் வாள்வெட்டுக்கு இலக்காகி இளைஞர் பலி !
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 23 வயதான ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
காரைநகருக்கு சென்று, வட்டுக்கோட்டை பகுதிக்கு திரும்பும் போது பயணித்த சிலரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுஇதன்போது, காயமடைந்தவர் வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.குறித்த சம்பவம் தொடர்பில். வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.முன்விரோதம் காரணமாக குறித்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.