வானிலை
18 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அபாய எச்சரிக்கை!

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்கள் உட்பட 18 மாவட்டங்களில் இன்று வெப்பச் சுட்டெண், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், வடமேல், தெற்கு , வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை, இரத்தினபுரி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டத்தின் சில இடங்களிலும் மனித உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண், வெப்பநிலை ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது