உள்நாட்டு செய்தி
போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 23 வயது பெண் கைது !
போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர், வாழைச்சேனையின் செம்மண்ணோடை பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
23 வயதுடைய குறித்த பெண்ணிடம் இருந்து 86,000 ரூபா பெறுமதியான போதைப்பொருட்களும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
53 கிராம் 240 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 24 கிராம் கேரள கஞ்சா மற்றும் 30 மில்லிகிராம் கொண்ட 1,950 போதை மாத்திரைகள் விற்பனைக்கு தாயார் செய்யப்பட்டநிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சந்தேக நபரிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.