உள்நாட்டு செய்தி
தனது மனைவியை தீ வைத்து கொலை செய்த கணவன்.!
மொரட்டுவ எகொட உயன பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை பெற்றோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தம்பதியினர் பிரதேசத்தில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்ததாகவும், சந்தேக நபரான கணவர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எகொட உயனவில் எரிபொருள் நிரப்பும் நிலையம் அருகில் உள்ள அங்கீகரிக்கப்படாத குடிசை வீட்டில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த பெண்ணுக்கு திருமணத்திற்குப் புறம்பான உறவு ஒன்று இருப்பதாக குற்றம் சுமத்தி,
கணவர் பெற்றோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியதால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.