உள்நாட்டு செய்தி
6 ஆசிரியர்கள் வைத்தியசாலையில் அனுமதி…!

பாணந்துறையில் உள்ள பாடசாலையொன்றில் 6 ஆசிரியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று உணவு இடைவேளையின் போது, அவர்கள் தேநீர் அருந்திய நிலையில், அவர்கள் பயன்படுத்திய சீனி போத்தலில் அடையாளம் காணப்படாத மருந்து வகைகள் கலக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சீனி போத்தலை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.