உள்நாட்டு செய்தி
பணி பெணொருவர் தீக்காயங்களுடன் பலி!
மஹரகம பகுதியிலுள்ள வீடொன்றில் பணியாற்றிவந்த பெண் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண், கொஸ்லந்தை மீரியபெத்தை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று பிள்ளைகளின் தாயான இந்த பெண், சுமார் 2 மாதங்களாக குறித்த வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிவந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.