உள்நாட்டு செய்தி
கந்தானையில் ஆயுதங்களுடன் 9 பேர் கொண்ட கும்பல் கைது!
தற்போது டுபாயில் வசித்து வரும் போதைப்பொருள் கடத்தல்காரரான ருவான் அல்லது ‘சூட்டி’யின் கூட்டாளிகள் என தெரிவிக்கப்படும் ஒன்பது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கந்தானையில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.கைது செய்யப்பட்ட போது T56 துப்பாக்கி, 2 மகசின்கள் மற்றும் 45 தோட்டாக்களையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றியுள்ளனர்.