உள்நாட்டு செய்தி
வெலிகமவில் பெண்கள் பாடசாலை விடுதியில் தீ விபத்து

மாத்தறை வெலிகம பிரதேசத்தில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றின் விடுதியின் ஒரு பகுதி தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.மாத்தறை வெலிகம ஹப்ஸா மகளிர் அரபிக் கல்லூரியில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விடுதியில் இருந்த சுமார் 150 மாணவர்கள் அப்பகுதி மக்கள் மற்றும் பாடசாலை அதிகாரிகளின் உதவியுடன் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.விடுதியின் மூன்றாவது மற்றும் நான்காவது மாடிகள், மாணவர்களின் படுக்கைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.இச்சம்பவத்தில் உயிர்சேதமோ காயமோ ஏற்படவில்லை, தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.