உள்நாட்டு செய்தி
பெண்களை பணத்துக்காக விற்பனை செய்யும் 2 நிலையங்கள் சுற்றிவளைப்பு.!
ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் பெண்களை பணத்துக்காக விற்பனை செய்யும்,
இரண்டு ஸ்பா நிலையங்களை சுற்றிவளைத்து இரண்டு முகாமையாளர்களுடன் 8 பெண்களையும் கைது செய்ததாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை, இங்கிரிய, இரத்தினபுரி, தமன, நிவித்திகல மற்றும் நாவலப்பிட்டிய பிரதேசங்களில் வசிக்கும்,
25 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட எட்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் மஹரகம வட்டேகெதர மற்றும் பன்னிபிட்டிய தெபானம பிரதேசத்தில் உள்ள இரண்டு ஸ்பா மையங்கள் மூலம்,
பெண்களை பணத்துக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலுக்கமைய நுகேகொட நீதிமன்றில் தேடுதல் உத்தரவு பெற்று இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.