உள்நாட்டு செய்தி
நெல் அறுவடையின் போது ஏற்பட்டுள்ள இழப்பீடு 10 – 15 % அதிகரிப்பு!
பெரும்போக நெல் அறுவடையின் போது, ஏற்பட்டுள்ள இழப்பீடு 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. சில பகுதிகளில் அது 25 சதவீதமாக அதிகரித்துள்ளாதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, பெரும்போகத்தின் 3 லட்சத்து 50 ஆயிரம் மெற்றிக் டன் பயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெற்பயிர் நீண்டகாலமாக பயிரிடப்பட்டிருந்தாலும் அது எப்போது விளையும் என்ற புரிதல் இல்லாமையே இதற்கு பிரதான காரணமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பயிர்ச் சேதங்களால் ஏற்பட்டுள்ள இழப்பு பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதி என மதிப்பிடப்பட்டுள்ளது.