உள்நாட்டு செய்தி
முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை
நாட்டில் முட்டை ஒன்றின் உற்பத்தி செலவு 30 ரூபாவாக இருந்தாலும், உள்ளூர் முட்டை ஒன்றின் விலை சந்தையில் 60 ரூபாவாக உயர்ந்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலங்களில் சந்தையில் ஏற்படும் முறையற்ற விலை உயர்வை தடுக்க முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலையை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் .
இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும் எனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.