உள்நாட்டு செய்தி
கொத்து, பிரைட் ரைஸ், தேநீர் விலைகள் அதிகரிப்பு !
இன்று நள்ளிரவு முதல் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி கொத்து மற்றும் பிரைட் ரைஸ் ஆகியன 50 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தேநீர் 5 ரூபாவினாலும் பால் தேநீர் 10 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிற்றுண்டிகள் 10 ரூபாவினாலும் சோற்றுப்பொதி 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.