Connect with us

உலகம்

பங்களாதேஷில் தீ விபத்து:சம்பவ இடத்திலே 43 பேர் பலி

Published

on

பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள ஏழு மாடி கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த தீப்பரவலில் 43 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

டாக்காவில் ஏழு மாடி கட்டடம் ஒன்றின் முதல் தளத்தில் அமைந்துள்ள உணவகத்தில் நேற்றிரவு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இதையடுத்து தீ வேகமாக அனைத்து மாடிகளுக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 22 பேர் படுகாயத்துடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை சுமார் 35 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்துள்ளனர்.