முக்கிய செய்தி
சாந்தனின் இறுதி மரியாதை தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிபந்தனை..!
சாந்தனின் பூத உடலை இறுதி மரியாதை செலுத்த எங்கும் வைக்காமல் மருத்துவமனையிலிருந்து நேராக விமான நிலையம் எடுத்து செல்ல வேண்டும் என்று தமிழ்நாடு அரசு நிபந்தனை விதித்துள்ளது.
எனவே, அவருக்கு இறுதி மரியாதை செலுத்த விரும்புவோர் ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்பட்ட உடல் நலக் குறைவால் சாந்தன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அதன் பின்னர், அவர் நாட்டுக்கு திரும்பும் தருணத்தில் உடல் நிலை மோசமடைந்து சென்னையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.