உள்நாட்டு செய்தி
பாடசாலை பேருந்து விபத்து : 24 பேர் காயம்
சியம்பலாண்டுவ பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் 24 பாடசாலை மாணவர்கள் உட்பட 36 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.