உள்நாட்டு செய்தி
மின்சாரம் தாக்கி இளைஞர் பலி !
புத்தளம் – நாகமடு பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.எலுவாங்குளம் இறால்மடுவ பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞர் நேற்று(28) காலை மரக்கறி தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு மின்சார இணைப்பை நிறுத்த முற்பட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த புத்தளம் பதில் நீதவான், சடலத்தைப் பார்வையிட்டார். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வண்ணாத்திவில்லு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.