உள்நாட்டு செய்தி
பூநகர் பகுதியில் நபர் ஒருவர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
திருகோணமலை – பூநகர் பகுதியில் நபர் ஒருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஈச்சிலம்பற்று – பூமரத்தடிசேனை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தாமரைப்பூ பறிப்பதற்காக குறித்த நபர் பூநகர் பகுதியிலுள்ள பணிச்சங்குளத்தில் இன்று காலை தமது நண்பருடன் படகில் சென்றுள்ளார்.
இதன்போது, படகு கவிழ்ந்துள்ள நிலையில், அவர்களில் ஒருவர் நீந்தி கரை சேர்ந்துள்ளதுடன் மற்றைய நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.