முக்கிய செய்தி
ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தது
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று ஐக்கிய மக்கள் சக்தியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலத்துக்கு உச்சநீதிமன்றம் முன்மொழிந்த திருத்தங்களை சபாநாயகர் உரிய முறையில் முன்வைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சபாநாயகர் அரசியலமைப்பு, பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் உள்ளிட்ட ஏனைய குற்றச்சாட்டுக்களை மீறியதாக பிரேரணையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், எதிர்க்கட்சி பிரதம கொறடா, லக்ஷ்மன் கீரெல்ல, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், திஸ்ஸ அத்தநாயக்க, சந்திம வீரக்கொடி, ஷான் விஜயலால் டி சில்வா உள்ளிட்டோர் இந்த பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர்.