முக்கிய செய்தி
PUCSL மின் கட்டணக் குறைப்பு தொடர்பில் ஆராய்வு
உத்தேச மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் ஆலோசிக்க, எதிர்வரும் புதன்கிழமை (28) கூடவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.
இந்த திருத்தம் ஒக்டோபர் 2023 இல் அமுல்படுத்தப்பட்ட அதிகரிப்புக்குப் பிறகு வருகிறது.
இலங்கை மின்சார சபை (CEB) தற்போதைய கட்டணத்தை குறைக்க கோரி ஒரு முன்மொழிவை சமர்ப்பித்துள்ளதாக PUCSL தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்கும் நோக்கில் புதிய பிரேரணை உள்ளதாக CEB முன்னர் அறிவித்திருந்தது.