முக்கிய செய்தி
மட்டக்களப்பு மாந்தீவில் சிறைச்சாலை அமைப்பது தொடர்பில் ஆராய்வு
மட்டக்களப்பு மாந்தீவில் சிறைச்சாலை அல்லது புனர்வாழ்வு நிலையத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாந்தீவு கிழக்கு மாகாணத்தில் 100 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட ஒரு தீவாகும், தற்போது தொழுநோயாளிகள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது நிலவும் நெரிசலுக்கு தீர்வாக, சிறைச்சாலை அல்லது புனர்வாழ்வு நிலையத்தை அமைப்பதற்கு, தீவை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக, அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அண்மையில், தீவின் கண்காணிப்புப் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
மருத்துவமனையில் தற்போது இரண்டு தொழு நோயாளிகள் மட்டுமே இருப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது. கொவிட் 19 தொற்றுநோய்களின் போது, இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையமாக பயன்படுத்தப்பட்டது