உள்நாட்டு செய்தி
மரக்கறிகளின் விலை குறைவு..!
பேலியகொடை புதிய மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலை மிகவும் குறைவடைந்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ கரட் 350 ரூபாவாக விலை குறைவடைந்துள்ளதுடன்,
ஒரு கிலோ தக்காளி மற்றும் போஞ்சிக்காய் 450 ரூபாவாகவும், லீக்ஸ் 300 ரூபாவாகவும் விலை குறைவடைந்துள்ளது.
குடைமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலைகள் 700 ரூபாவாகவும், 600 ரூபாவாகவும் சற்று அதிகரித்துள்ளது.
இதேவேளை, ஒரு கிலோ கோழி இறைச்சி 1,150 ரூபாவாகவும், தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி 1,100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.