உள்நாட்டு செய்தி
இராவண எல்ல மலையில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு…!
இராவண எல்ல பிரதேசத்தில் எல்ல மலையில் இருந்து தவறி விழுந்து காயங்களுக்கு உள்ளான 32 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர், மற்றுமொரு நண்பருடன் நேற்று காலை எல்ல மலையில் ஏறி, மாலையில் மலையில் இறங்கும் போது பள்ளத்தில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த இவர், வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.