உள்நாட்டு செய்தி
கொழும்பின் இருவேறு பகுதிகளில் இருவர் சுட்டுக்கொலை
கொழும்பின் இருவேறு பகுதிகளில் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ராகம எப்பிட்டிவல பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் துப்பாக்கிச சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது 39 வயதான நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி சூடு
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை வத்தளை மஹாபாகே பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வெல்லே சாரங்க என்ற குற்றவாளியின் உறவினர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இருவர்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இருவர்
அண்மைக்காலமாக போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுவினருக்கு இடையில் பழி வாங்கும் நடவடிக்கை தீவரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக பலர் சுட்டுக் கொலை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது