உள்நாட்டு செய்தி
கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் விபத்தில் மரணம்

பத்தரமுல்ல விக்கிரமசிங்க புர சந்தியில் லொறியொன்று மோதியதில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உதவி விரிவுரையாளர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த லக்மினி போகமுவ (24) கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் உதவி விரிவுரையாளரும் விக்கிரமசிங்க புரவைச் சேர்ந்தவருமாவார்.
நேற்றுக் காலை கடமைக்குச் செல்வதற்காக பல்கலைக்கழகத்துக்குச் சென்றுகொண்டிருந்த போதே விபத்துக்குள்ளானார். காயமடைந்தவர் உடனடியாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளுக்காக லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்