முக்கிய செய்தி
அரசியல் ரீதியில் பாதகமானது என்றாலும் நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லது-சாகல ரத்நாயக்க
கடந்த காலங்களில் தேர்தல்களை மாத்திரம் இலக்காக கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததாக மாத்தறை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று (16) நடைபெற்ற 2024 வரவு செலவு திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் நிகழ்வில் வலியுறுத்திய ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, தற்போது முன்னெடுக்கப்படும் மறுசீரமைப்பு பணிகள் அரசியல் ரீதியில் பாதகமானது என்றாலும் நாட்டின் எதிர்காலத்துக்கு நன்மையானதாக அமையுமெனவும் தெரிவித்தார்.