முக்கிய செய்தி
அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் முதற்கட்ட திறப்பு விழா..!
நாடு நெருக்கடியான சூழலை எதிர்கொண்ட போது தயக்கமின்றி நாட்டின் தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டதாகவும், நாட்டை மீண்டும் ஸ்திரமற்ற நிலைக்கு கொண்டு செல்வதற்கு இடமளிக்காமல் பொருளாதாரத்தை சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கு ஜனாதிபதியை பாராட்ட வேண்டும் எனவும் அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் முதற்கட்ட திறப்பு விழாவில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.