உள்நாட்டு செய்தி
முட்டை ஒன்றின் சில்லறை விலை 65 ரூபா வரை அதிகரிக்கும்…!
முட்டை ஒன்றின் சில்லறை விலை அடுத்த வாரம் 62 முதல் 65 ரூபா வரை அதிகரிக்கப்படும் என,
அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் அன்டன் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
மொத்த வியாபாரிகள் கோழிப் பண்ணைகளில் ஒரு முட்டையை 53 அல்லது 54 ரூபாவுக்குப் பெற்று ஒரு முட்டையை 58 அல்லது 59 ரூபாவுக்கு சில்லறை விற்பனையாளர்களுக்கு வழங்குவதாகவும் அவர் கூறினார்.
மொத்த வியாபாரிகளால் 53 அல்லது 54 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படும் முட்டைகளுக்கு ஒரு முட்டைக்கான போக்குவரத்துச் செலவாக ஒரு ரூபாவும்,
மேலும் மூன்று ரூபாவும் சேர்த்தே சில்லறை விற்பனையாளர்களுக்கு வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.