உள்நாட்டு செய்தி
சாய்ந்தமருதில் மர ஆலையில் தீ பரவல் !
அம்பாறை – சாய்ந்தமருதில் மர ஆலை ஒன்றில் பரவிய தீயினால் மர ஆலை பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
சாய்ந்தமருதிலுள்ள மர ஆலையில் இன்று அதிகாலை தீ பரவியது. இதனையடுத்து, கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த தீயணைப்பு பிரிவினரும் பொதுமக்களும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீயினால் அதிகளவான மரத் தளபாடங்களும் உபகரணங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ பரவியமைக்கான காரணம் அறியப்படாத நிலையில், சாய்ந்தமருது பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.