உள்நாட்டு செய்தி
10 கோடி ரூபா பெறுமதியான போதை வில்லைகளுடன் ஒருவர் கைது !
சட்டவிரோதமான முறையில் 192,000 போதை வில்லைகளை வைத்திருந்த ஒருவர் வத்தளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வில்லைகள் 10 கோடி ரூபா பெறுமதியானவை என மதிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வத்தளை – அப்புகேவத்தை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.