உள்நாட்டு செய்தி
ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; 5 பிள்ளைகளின் தந்தை பலி..!
கிளிநொச்சியில் புகையிரத பாதுகாப்பு கடவையை கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (02) பிற்பகல் 5.00 மணியளவில் கிளிநொச்சி டிப்போ வீதியில் புகையிரதக் கடவையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
புகையிரத வருகைக்காக மூடப்பட்டிருந்த புகையிரத பாதுகாப்பு கடவையை கடக்க முற்பட்ட நிலையில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த நபர், புகையிரக் கடவை மூடப்பட்டிருந்த நிலையில், அதற்குள் நுழைந்து செல்ல முற்பட்ட நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 44 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாதுகாப்பற்ற முறையில் புகையிரதக் கடவையை கடக்க முயன்றதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளமை விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.