உள்நாட்டு செய்தி
பொலிஸாரின் விசேட சோதனையில் 770 பேர் கைது
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 770 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 567 பேரும், குற்றப்பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலில் உள்ள 203 பேரும் அடங்குவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கைதானவர்களில் 06 பேர் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுவதுடன், 2 பேர் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் பொலிஸ் விசேட பணியகத்தினால் தேடப்படும் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள 5 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 132 கிராம் ஹெரோயின், 121 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 5,416 கஞ்சா செடிகள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.