உள்நாட்டு செய்தி
லிட்ரோ எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் இல்லை…!
லிட்ரோ எரிவாயு விலையில் இம்மாதம் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, கடந்த ஜனவரி மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விற்பனை செய்யப்பட்ட விலையிலேயே தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொது மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு இன்னல்கள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.