உள்நாட்டு செய்தி
இலங்கையின் பணவீக்கம் மற்றும் உணவுப் பணவீக்கம் அதிகரிப்பு!
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, 2024 ஜனவரியில் இலங்கையின் பணவீக்கம் 6.4 ஆக உயர்ந்துள்ளதாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் தரவுகளின்படி டிசம்பர் 2023 இல் பணவீக்கம் 4% ஆக பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதற்கிடையில், 2024 ஜனவரியில் உணவுப் பணவீக்கம் 3.3% ஆக உயர்ந்தது. அது டிசம்பர் 2023 இல் 0.3% ஆக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.