உள்நாட்டு செய்தி
பெற்றோரின் தகராறினால் மன உளைச்சலுக்குள்ளான, 16 வயது மகளின் தவறான முடிவு..!
பதுளை – புவக்கொடமுல்ல பிரதேசத்தில் தாய், தந்தை இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் மன உளைச்சலுக்குள்ளான மகள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
உயிரிழந்தவர் 16 வயதுடைய தரம் 11 இல் கல்வி கற்கும் பாடசாலை மாணவியாவார்.
இவர் தனது மேலதிக வகுப்புகளுக்கு பெற்றோரிடம் பணம் கோரிய நிலையில் இது தொடர்பில் தாய் மற்றும் தந்தைக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
பெற்றோரின் தகராறில் மன உளைச்சலுக்குள்ளான மகள் அதிகளவிலான மருந்துகளை உட்கொண்டுள்ளார்.
இந்நிலையில் திடீரென சுகயீனமடைந்த மகளை அவரது தந்தை பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
மகளை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் இரத்த அழுத்த மருந்துகளை அதிகளவில் பருகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.