முக்கிய செய்தி
இரத்து செய்யப்பட்ட உயர்தர விவசாய விஞ்ஞான பரீட்சை தொடர்பிலான புதிய அறிவிப்பு
இரத்து செய்யப்பட்ட உயர்தர விவசாய விஞ்ஞான வினாத்தாளுக்குப் பதிலாக நடைபெறவுள்ள புதிய பரீட்சைக்குத் தோற்றுவதற்கான அனுமதி அட்டையை www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த பரீட்சைகளுக்கான அனுமதி அட்டை கிடைக்கப்பெறாவிட்டால் மாத்திரம் இணையத்தளத்திற்கு பிரவேசித்து அனுமதி அட்டையை பெற்றுக்கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.