Connect with us

உள்நாட்டு செய்தி

மாணவி ஒருவரை பகிடிவதைக்கு உள்ளாக்கிய 6 மாணவர்கள் கைது..!

Published

on

மாணவி ஒருவரை பகிடிவதைக்கு உள்ளாக்கியமை தொடர்பில் சபரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த,

6 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 14 ஆம் திகதி சமனலவெவ பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய,

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, குறித்த மாணவர்கள் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானம் மற்றும் மொழியியல் கற்கை பீடத்தின் நான்காம் ஆண்டு மாணவர்களே,

இவ்வாறு கைதாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.