உள்நாட்டு செய்தி
கராப்பிட்டிய விசேட வைத்திய நிபுணருக்கு பிணை!
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் பணிபுரியும் சிற்றூழியர்கள் இருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விசேட வைத்திய நிபுணர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கராப்பிட்டிய வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர் ஒருவரையும் பெண் ஊழியர் ஒருவரையும் தாக்கியதாக கூறப்படும் புற்றுநோய் பிரிவுக்கு பொறுப்பான விசேட வைத்தியரை காலி பொலிஸார் கடந்த 17 ஆம் திகதி கைது செய்தனர்.
இதனையடுத்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் உத்தரவிட்டார். இந்தநிலையில் குறித்த விசேட வைத்திய நிபுணர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.