முக்கிய செய்தி
இலங்கை மின்சார சபையின் பணியாளர்கள் 17 பேர் பணியிடைநிறுத்தம்
இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை மின்சார சபையின் 17 பணியாளர்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
மின்சார சபையின் காசாளர் கருமபீடங்களில் பணியாற்றியவர்களே இவ்வாறு சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான சட்டமூலத்திற்கு எதிராக, அந்த காரியாலய வளாகத்தில் இலங்கை மின்சார சபை தொழிற்சங்கம் அண்மையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தது