Connect with us

உள்நாட்டு செய்தி

தமிழர்களைத் தவிர இந்தியாவிற்கு பாதுகாப்பாக எவராலும் இருக்க முடியாது – சிறிதரன்

Published

on

இந்தியாவிற்கு தமிழர்களாலேயே பாதுகாப்பு என சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்” சீன செயற்பாடுகள் என்பது இந்தியாவிற்கு ஆபத்தானது. இந்தியா இனியும் தமிழர்களை எதிரியாக பார்க்காது அவர்களின் நலன்கள் என்பதற்கு அப்பால் இந்தியாவின் நலன்கள் என்பதை கருத்தில் கொண்டாவது.

வடக்கு கிழக்கிலே இணைந்த வட கிழக்கிலே தமிழர்களிற்கான இழந்து போன உரிமைகள், சுயாட்சியை வழங்குவதன் மூலம் இந்தியாவிற்கான ஓர் பாதுகாப்பு நண்பனாக இந்தியாவின் எப்பொழுதுமான பாதுகாவலனாக வடக்கு கிழக்கின் தமிழர்களே இருப்பார்கள்.

தமிழர்களைத் தவிர இந்தியாவிற்கு பாதுகாப்பாக எவராலும் இருக்க முடியாது என அவர் தெரிவித்தார். ஆகவே இந்தியா தனது வெளியுறவு கொள்கையிலிருந்து மாறி இன்று சீன அரசாங்கத்தின் ஊடாகவோ அல்லது வெளிநாட்டு அரசாங்கத்தின் ஊடாகவோ இலங்கை மேற்கொள்கின்ற இந்த வலிந்து இழுத்து மேற்கொள்ளுகின்ற இந்த நடவடிக்கைகளிற்கு தமிழர்களுடைய நலன்களையும், தமிழர்களுடைய இருப்புக்களையும் பாதுகாத்துக்கொண்டு இந்தியா முயற்சித்தால் அது இந்தியாவிற்கு பெரிய பலத்தை தரும்.

உரிய தரப்புக்கு எமது ஆதரவு குறிப்பாக இந்தியாவிற்கு எமது ஆதரவு இருக்கும். சீனாவோடு எங்களுக்கு இருக்க முடியாது. அதனால்தான் நாங்கள் அடிவாங்குகின்ற காலத்திலும் சரி, நாங்கள் தோற்றுப்புாயிருக்கின்ற காலத்திலும் சரி இப்பொழுது நாங்கள் ஏதுமற்ற ஏதிலிகளாக இருக்கின்ற காலங்களில்கூட இந்தியாவின் பக்கம் நிக்கின்றோம். இந்தியாவிற்கு எப்பொழுதும் நாங்கள் ஆதரவாக இருக்கின்றோம். நாங்கள் இந்தியாவுடன் சேர்ந்து இயங்குவதற்கு தயாராக இருக்கின்றோம் என்ற செய்தியை நாங்கள் மீண்டும் மீண்டும் குறிப்பிடுகின்றோம். அதற்காக நாங்கள் என்ன வலையையும் கொடுக்க தயாராக இருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.